தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசிய மொழி ஆற்றலை வலுப்படுத்த கையெடு தயாரிக்கப்பட்டுள்ளது

ஈப்போ அக் 15*
தாய் மொழி பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப்பள்ளில் மாணவர்களின் தேசிய மொழி ஆற்றலை வலுப்படுத்த பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளுக்கும் வழி காட்டி கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கம் , மாநில கல்வி இலாகா மற்றும் ஈப்போவில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தின் ஆதரவுடன் pertubuhan aspirasi. Dan pembangunan integrasi kebangsan ( nadi) Perak இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த கையேடு தயாரிக்கபட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சியின் பயனால் தயாரிக்கப்பட்ட அந்த கையேடு ஈப்போ ஆசிரியர் பயற்சி கல்வி கழகத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமட்டை பிரதிநிதித்து வருகை அளித்த அவரின் அரசியல் செயலாளர் Mohamad hamidi baharudin கலந்துக்கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

இந்த நாட்டில். தாய் மொழி கவ்வி கல்வி வளர்ச்சிக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இதே வேளையில் தேசிய மொழி ஆற்றலை வலுப்படுத்த nadi இயக்கம் முன்னேடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டு வரும் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் சண்முகவேல் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்துகொண்டார்.

தமிழ்ப்பள்ளிகளில் இருந்து இடை நிலைப் பள்ளிகளில தங்களின் கல்வியை தொடங்கும் மாணவர்கள பலர் தேசிய மொழியில் சரளமாக பேசவும் ,எழுத படிக்க சிரமத்தை எதிர்நோக்குவதை காணலாம்.

அதுபோன்ற மாணவர்களுக்கு இந்த வழிகாட்டி கையேடு தமிழ்பள்ளிகளில் தேசிய மொழி பாடங்களை போதிக்கு ஆசிரியர களுக்கு பேருதவியாக இருக்கும். என்று Nadi இயக்கத்தின் தலைவர் சண்முகவேல் சுப்பிரமணியம் கூறினார்

ஈப்போ ஆசிரியர். பயிற்சி கல்வி கழகத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் தேசிய மொழியை போதிக்கும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்

இதில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் பலர் , இது நல்ல தொரு திட்டம் இந்த பயிற்சி கையேடு மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும் , மாணவர்கள் தேசிய மொழி ஆற்றலை வலுப்படுத்த வகை செய்யும் என்ற முழு நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் அதனை முன்னெடுத்த முனைவர் சண்முகவேலு சுப்பிரமணியத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்த கையேடு வெளியீட்டு விழாவில் பேராக் மாநில கல்வித் துறையின் உதவி இயக்குநர்
ஹஜ்ஜா ஃபாதிலா ஹவாரி,

ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தின் உதவித் தலைவர் கைருலானுார் இஸ்மாயில்,

பேராக் மாநில தமிழ்ப்பளிகளின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பழனி சுப்பையா ஆகியோர் கலத்துகொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles