சிலாங்கூரில் இந்திய சமூகத் தலைவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- மானியத்தை உயர்த்தவும் மந்திரி புசார் ஒப்புதல்

ஷா ஆலம், அக். 15 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்
தலைவர்கள் (கே.கே.ஐ.) எண்ணிக்கையை உயர்த்த மாநில அரசு
உத்தேசித்துள்ளது.

அதே சமயம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர
மானியத்தை அதிகரிக்கவும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியர் வாக்காளர்களைக் கொண்ட
தொகுதிகளில் இரண்டு இந்திய சமூகத் தலைவர்களை நியமிப்பதற்கு தாம்
அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இதன் வழி தற்போது 62 பேராக உள்ள இந்திய சமூகத் தலைவர்கள்
எண்ணிக்கை உயர்வு காண்பதற்கும் சமூகத்திற்கான சேவைகளை
இன்னும் விரிவான அளவில் அவர்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்பு
ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

அதே சமயம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர மானியத்தை 10,000
வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளியாக அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தில் உயர்த்துவதற்கு தாம் முன்வைத்த கோரிக்கையை மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கொள்கையளவில் ஏற்றுக்
கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles