நாட்டின் உள்நாட்டு உற்பத்தி செயல்திறன் சிறந்த இலக்கை எட்டியுள்ளது – சிவகுமார் பாராட்டு!!

கோலாலம்பூர்,அக்15: நாட்டின் 2024ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி செயல்திறன் (ஜி.டி.பி) 4.8 விழுகாடு முதல் 5.3 விழுகாடு வரை எட்டியிருப்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் சாத்தியமான இலக்கை எட்டியிருப்பதை நிரூபித்துள்ளதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.

இது நிதி அமைச்சராகவும் நாட்டை திறன்பட வழிநடத்தும் அன்வார் இப்ராஹிம் அவர்களின் பொருளாதார கொள்கைகளின் செயல்திறனையும் நிரூபிப்பதாக மேலும் கூறிய சிவகுமார் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்பக் கணிப்பு நான்கு முதல் ஐந்து விழுகாடு வரை விஞ்யிருப்பது உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் வெற்றியை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,”நல்ல நிதி மற்றும் பணவியல் கொள்கைகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் சந்தையை நிலைப்படுத்தவும் முடிந்தது என்றும் உற்பத்தி, சேவைகள் மற்றும் ஏற்றுமதி போன்ற பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் வளர்ச்சியை அது தூண்டுவதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, மூலோபாய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதும் இந்த சாதனையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

உலகப் பொருளாதார சவால்கள், புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, உலகளாவிய பணவீக்கம் மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை மீறி தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மடானி அரசாங்கத்தின் திறனை இந்த சாதனைகள் அனைத்தும் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் மேலும் நினைவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த வலுவான வளர்ச்சி வேகத்துடன் எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டும் ஆரோக்கியமான நிலையில் மலேசியா இருப்பதாகவும் அவர் கணித்தார்.

இதற்கிடையில்,நாட்டிற்கு சாதகமான மற்றும் நன்மை பயக்கும் தாக்கங்களை உருவாக்கும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியிலும் மடானி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிவகுமார் வலியுறுத்தினார்.

இச்சிறந்த சாதனைக்காக நாட்டின் பிரதமரையும் மடானி அரசாங்கத்தை வெகுவாக பாராட்டிய சிவகுமார் அனைத்து தரப்பு மக்களின் நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலையில் நாம் சரியான் இலக்கில் பயணிப்பதாகவும் இது பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கமும் நாட்டின் மீது அக்கறையும் விசுவாசமும் கொண்டுள்ள ஒட்டுமொத்த மலேசியர்களின் ஆதரவும் பெரும் அடித்தலம் என்றும் சிவகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles