
கோலாலம்பூர் அக் 15-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோலாலம்பூர் Nu Sentral நுழை வாயிலில் ராட்சத ரங்கோலி கோலம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரவாங்கை சேர்ந்த சிவபாலன் ஆறுமுகம் கைவண்ணத்தில் இந்த ரங்கோலி கோலம் போடப்பட்டுள்ளது.
பலவிதமான வண்ணங்கள் இந்த கோலத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த ராட்சத ரங்கோலி கோலம் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது என்று எட்வின் தெரிவித்தார்.
தற்போது கோலாலம்பூர் Nu Sentral வளாகத்தில் தீபாவளி சந்தையை முன்னிட்டு அங்கு வருகை தரும் பொதுமக்களின் கவனத்தை இந்த கோலம் பெரிதும் ஈர்த்துள்ளது என்று வெங்கடேஷ் மற்றும் சுகந்தி ஆகியோர் தெரிவித்தனர்.

