சென்னை அருகே நாளை கரை கடக்கும் புயல்!4 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட்

சென்னை: அக் 16-
சென்னை அருகே நாளை (அக்.17) புயல் சின்னம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில் நாளை(அக்.17) கரையைக் கடக்கும்

வட மாவட்டங்களை இன்று நெருங்குது புயல்
புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 42 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles