அதீத ஆற்றல்மிகு தலைமுறையை உருவாக்கும் கல்வி அமைச்சின் கல்வி உருமாற்றத்தை சிவகுமார் வரவேற்றார்!!

கோலாலம்பூர்,அக்17: தோற்றுநோய்க்கு பிந்தைய கல்வி உருமாற்றம் உலகளாவிய டிஜிட்டல் கல்வியல் நிலத்தன்மையில் கால்பதித்திருக்கும் நிலையில் அதீத ஆற்றல்மிகு தலைமுறையை உருவாக்க கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் கல்வி உருமாற்றத்தை தாம் வரவேற்பதாகவும்,அது காலத்தின் தேவையும் கூட என்றார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் அவர்கள்.

தொழில்துறை புரட்சி 4.0 (IR 4.0) மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை உலகளாவிய கல்வி நிலப்பரப்பை வியத்தகு முறையில் மாற்றியுள்ளன. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியாக, மலேசியக் கல்வி அமைச்சு மலேசியாவின் தேசிய கல்வி திட்டத்தில் காலத்திற்கு ஒப்ப உருமாற்றத்தை வரையறுத்து அதுசார்ந்த வியூகங்களை அமைத்து வருவதை இளம் தலைமுறையின் எதிர்காலத்தின் மீது அக்கறைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினராக அதனை தாம் வரவேற்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற மன்றத்தில் கல்வி அமைச்சு அளித்த பதில் ஒன்றில் அதன் விரிவான மற்றும் துள்ளியமான பதில்களால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர் கல்வி அமைச்சின் சம்மதப்பட்ட விளக்கம் தற்போதைய கல்விப் பிரச்னைகளைக் கையாள்வதில் அவர்களின் தீவிரத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாக குறிப்பிட்டார்.தொற்றுநோய்க்குப் பிந்தையக் காலக்கட்டத்தில் கல்வி அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளும் சவால்களும் மட்டுமின்றி அவர்களின் தூரநோக்கு வியூகங்களும் நனிச் சிறந்தது,நகர்புறம்,புறநகர் இடையிலான தொழில்நுட்பத்தின் இடைவெளியை ஆக்கப்பூர்வமாக கையாள்வது முதற்கொண்டு அனைத்து நிலையிலும் கல்வி அமைச்சின் பணி சிறப்பாகவே அமைந்திருந்தது என்றார்.

மேலும்,கல்வி அமைச்சினால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தம் குறித்து சிவக்குமார் கூறுகையில், “டிஜிட்டல் கல்வி, MBMMBI, பாடத்திட்ட தலையீடு, STEM கல்வி, TVET கல்வி மற்றும் பாலர் கல்வி ஆகிய ஆறு முக்கிய மையங்களை தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் இது ஆக்கப்பூர்வமானது என்றும் கூறினார்.அத்தோடு தொழிலியல் புரட்சி 4.0 சவாலை எதிர்கொள்ளவும், உலகளாவிய போட்டிக்கு மலேசிய மாணவர்களை தயார்படுத்தவும் இது வழிகோலும் என்றும் விவரித்தார்.

அதுமட்டுமின்றி, 2027 பள்ளி பாடத்திட்டம் குறித்து விவரித்த அவர் புதிய பாடத்திட்டத்தில் ஏழு முக்கிய திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமான முயற்சியாகும் என்றார். இந்த அணுகுமுறை கண்ணியமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட தலைமுறையை உருவாக்க உதவும் என்று தனது நம்பிக்கையினை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும்.கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் கல்விக் கொள்கையை வெகுவாக பாராட்டிய சிவகுமார்,பாடத்திட்ட சாதனங்களின் விநியோகம் மற்றும் பள்ளிகளில் இணைய அணுகலை அதிகரிப்பது டிஜிட்டல் தொடர்பை நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கியமான அம்சமாகும் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, ” மலேசியா டிஜிட்டல் கல்வி கற்றல் முன்முயற்சி (DELIMA) தளமானது, ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிசெய்வதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த சிவகுமார் ஆசிரியர் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். கல்வி அமைச்சின் பதிலின் அடிப்படையில், தீவிரமான மற்றும் தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தாம் பரிந்துரைக்க விரும்புவதாக கூறினார். நடப்பியல் சூழலில் ஆசிரியர்கள் கல்வி முறையின் முதுகெலும்பாக உள்ளனர், மேலும் அவர்கள் திறமையான முகவர்களாக செயல்படவும் கல்வி உருமாற்றத்தின் வலுவான நம்பிக்கைகளாகவும் உருவெடுக்க வேண்டும் என்பதையும் நினைவுறுத்தினார்.

மேலும்,எதிர்கால சூழலை கவனத்தில் கொண்டு கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பும் இணக்கம் அவசியம் என்றும் அவர் பரிந்துரை செய்தார். கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தகுதி வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதற்கு முக்கியமான பங்களிப்பை செய்யும் என்றார்.இது நடப்பியல் மற்றும் எதிர்கால வேலை சந்தையின் தேவைகளுக்கு பொருத்தமானதும் கூட என்றும் விளக்கினார்.

கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ள உத்திகள்,கூடுதல் பரிந்துரைகளுடன் இணைந்தால் மலேசியக் கல்வி முறை வருங்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என தனது நம்பிக்கையினை வெளிப்படுத்திய அவர் கல்வி உருமாற்றத்தையும் அதுசார்ந்த வியூகங்களையும் ஆக்கப்பூர்வப் பணிகளிலும் தமது ஆதரவு தொடரும் என்றார்.

இறுதியாக அவர் கல்வி அமைச்சின் இந்த கல்வி உருமாற்றத்தை கல்வி சார்ந்த நிறுவனங்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அனைத்து தரப்பின் புரிதலும் ஆதரவும் தான் நாட்டின் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் பின்னணி,அவர்கள் வசிக்கும் சூழல் என எதையும் ஒரு பொருட்டாக கொள்ளாமல் கல்வி உருமாற்றத்தால் டிஜிட்டல் உலகில் வெற்றிகளையும் சாதனைகளையும் அவர்களால் படைக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles