
கோலாலம்பூர் அக் 17-
பிரிக்பீல்ட்ஸ் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் கடந்த வாரம் இறுதியில் முறுக்கு சுடும் நிகழ்வு நடைபெற்றது.
பிரிக்பீல்ட்ஸ் ருக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் தலைமையில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு முறுக்குகளை சுட்டனர்.
ரூக்குன் தெத்தாங்காவின் துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவா, பொருளாளர் திருமதி தங்கம், செயலவை உறுப்பினர் பூபாலன் உட்பட அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு தயாரிக்கப்பட்ட முறுக்கு வகைகள் டப்பாக்களில் அடைக்கப்பட்ட பின்னர் பேரு குறைந்த வர்களுக்கும் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கும் வழங்கப்பட்டதாக ஸ்டார் மணியம் தெரிவித்தார்.

