
கோலாலம்பூர் அக் 18-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவனை சந்தித்து மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தலைமையில் துணை தலைவர் காளிதாஸ், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோ, ஜீவா ராஜா, ரவி முனியாண்டி, துணை செயலாளர் குணா, செயலவை உறுப்பினர்கள் இராமன் குட்டி, மூர்த்தி ஆர்டிஎம், காளிதாஸ் சுப்ரமணியம், பவளச்செல்வன், கிருஷ்ணன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு எப்போதும் தமது ஆதரவு இருக்கும் என்று டத்தோ சகாதேவன் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிகளை வழங்கி வரும் டத்தோ சகாதேவனுக்கு சங்கத்தின் சார்பில் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

