அகற்றப்பட்ட கடைகள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண்பேன்! பத்து எம்.பி. பிரபாகரன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 18-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்ட சில கடைகளை டிபிகேஎல் இன்று அகற்றியது.

முறையான பெர்மிட் இல்லாததால் இந்த கடைகளை டிபிகேஎல் அகற்றி உள்ளது.

டிபிகேஎல் இந்த கடைகளை அகற்றியதால் அதன் உரிமையாளர்கள் பெரும் ஆத்திரம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் அங்கு வருகை புரிந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கடைக்காரர்களை சந்தித்து பேசினார்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையில் இந்த கடைகள் மீண்டும் அமைக்க டிபிகேஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பேன் என்று அவர் சொன்னார்.

அதுவரை அனைவரும் பொறுமை காக்கவும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles