2025 வரவு செலவுத் திட்டத்தில் மித்ராவுக்கு வெ.10 கோடி- தெக்குன் கடனுதவித் திட்டத்திற்கு வெ. 3 கோடி ஒதுக்கீடு!

கோலாலம்பூர், அக். 18- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று
அறிவித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா
எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு பத்து கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தெக்குன் நேஷனல் வர்த்தக கடனுதவித் திட்டத்தில் இந்தியர்கள்
பயன்பெறுவதற்கு ஏதுவாக மூன்று கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் சமூக நல மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கு இந்த வரவு
செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியாக இது விளங்குகிறது. இது தவிர
இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் உள்பட அனைத்து
மொழிப் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு 200 கோடி வெள்ளி
ஒதுக்கியுள்ளது.
மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு
கல்வி, வர்த்தக மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக
இந்திய சமூகமும் பயன் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
2025 வரவு செலவுத் திட்டத்தில் மித்ராவுக்கு வெ.10 கோடி- தெக்குன் கடனுதவித் திட்டத்திற்கு வெ. 3 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக். 19- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
அறிவித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா
எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு பத்து கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தெக்குன் நேஷனல் வர்த்தக கடனுதவித் திட்டத்தில் இந்தியர்கள்
பயன்பெறுவதற்கு ஏதுவாக மூன்று கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது

இந்தியர்களின் சமூக நல மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கு இந்த வரவு
செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியாக இது விளங்குகிறது.

இது தவிர
இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் உள்பட அனைத்து
மொழிப் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு 200 கோடி வெள்ளி
ஒதுக்கியுள்ளது

மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு
கல்வி, வர்த்தக மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக
இந்திய சமூகமும் பயன் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles