ஜனவரி முதல் இனிப்பு பானங்களுக்கு கலால் வரி அதிகரிப்பு!

ஷா ஆலம், அக். 19- இனிப்பு பானங்களுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 40 காசு என்ற அளவில் வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி கட்டங் கட்டமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தொற்றா நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சீனி விளங்கி வரும் அதேவேளையில் உடல் பருமன் பிரச்சினைக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த கூடுதல் கலால் வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் தொகை நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மற்றும் அந்நோய்க்கான மருந்து விநியோகத்தை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles