ஷா ஆலம், அக். 18- பிரதமர் பதவிக்கான சம்பளத்தை பெறப்போவதில்லை
என்று கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற போது எடுத்த
முடிவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் உறுதியாக
உள்ளார்.
அதே சமயம், அமைச்சர்கள் மற்றும் அரசியல் நியமனப் பதவிகளில்
உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு சம்பளக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக
அன்வார் சொன்னார்.
அமைச்சர்களும் அரசியல் நியமனப் பதவிகளில் இருப்பவர்களும் 20
விழுக்காட்டு சம்பளக் குறைப்புக்கு உட்பட்டுள்ளதோடு நான் தொடர்ந்து
பிரதமருக்கான சம்பளத்தை பெறாமலிருந்து வருகிறேன் என்று
நாடாளுமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக்
கூட்டத்தின் போது அன்வாரும் அமைச்சர்களும் சம்பளக் குறைப்புக்கு
ஒப்புதல் வழங்கினர்.