
கோலாலம்பூர் அக். 19-
நாடு முழுவதும் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த
பொது சந்தைகளைச் சீரமைப்பதற்கு பத்து கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவு அங்காடிக் கடைகள் மற்றும் பொது சந்தைகளின் பாதுகாப்பும்
வசதியும் உயரிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்
என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
இதன் அடிப்படையில் அடுத்தாண்டு அனைத்து ஊராட்சி மன்றப்
பகுதிகளிலும உணவு அங்காடிக் கடைகளை நிர்மாணிப்பதற்கும் பொது
சந்தைகளை தரம் உயர்த்துவதற்கும் 10 கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது
என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த
போது அவர் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களிலும் தாமு டேசா தாமு எனப்படும்
அங்காடிக் கடைகளை அரசாங்கம் உருவாக்க உள்ளதாகவும் அவர்
சொன்னார்.
பெர்னாமா

