தெங்கு கிளானாவில் கார்களை இழுத்துச் செல்வதா? டத்தோஸ்ரீ சண்முகம் இராமசாமி போலீசில் புகார்

மா.பவளச்செல்வன்

கிள்ளான், அக் 19-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு
தெங்கு கிள்ளானில் பொதுமக்கள் கார்களை நிறுத்த போதுமான இடம் இல்லை.

இதனால் தீபாவளி நேரத்தில் அபராதம் செலுத்துவதற்கே பணம் செலவாவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்

இம்மாத இறுதியில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இதனால் இந்திய மக்கள் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தெங்கு கிள்ளானில் அதிகமான மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் இப்பகுதியில் போதுமான கார் நிறுத்தும் இடம் இல்லை. இதனால் மக்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

ஆனால் கிள்ளான் நகராண்மைக் கழகம் நியமித்ததாக கூறிக் கொள்ளும் ஒரு தரப்பினர் கார்களை இழுத்து செல்கிறார்கள் .

பொதுமக்கள் அபராதம் செலுத்தி கார்களை மக்கள் மீட்டு வருகின்றர்.

இந்த கார்களை இழுக்கும் தரப்பினர் முறையான சீருடை அணிந்து இருக்கவில்லை.

கார்களை நிறுத்த வேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கலாம்.

அல்லது கார்களை அப்புறப்படுத்துங்கள் என்று கூறலாம்.

எதுவுமே செய்யாமல் அங்கு வரும் அந்த தரப்பினர் மின்னல் வேகத்தில் கார்களை இழுத்துச் செல்கிறார்கள்.

நீங்கள் யார் என்று கேட்டால் நாங்கள் கிள்ளான் நகராண்மைக் கழகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்று அடாவடித்தனமாக கூறுகிறார்கள்.

இவர்களின் நடவடிக்கை தொடர்பில் தான் போலீசில் புகார் செய்திருப்பதாக டத்தோ ஸ்ரீ சண்முகம் ராமசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles