குறை கூறுபவர்கள் பற்றி கவலையில்லை!மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது!தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், அக்.19-

நாட்டிலுள்ள கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் உறுமாற்றத்துடன் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என அதன் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா தெரிவித்தார்.

நேற்று மாஷா பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாஜூ ஜெயா கூட்டறவுக் கழகத்தின் 32ஆவது ஆண்டுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் என்பது அதன் உறுப்பினர்களின் நலனை காக்கும் பேரியக்கமாகும்.

அதன் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பல்வேறு செயல் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் இவ்வாண்டில் 334 புதிய உறுப்பினர்கள் கூட்டுறவுக் கழகத்தில் பதிந்துள்ளதாக அவர் சொன்னார்.

அதே சமயம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் யாவும் பொறுப்பாளர்களின் அங்கீகாரத்துடன் முறையே செயல்படுத்தப்பட்டு வருகிறது..

குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். அதனை பொறுப்படுத்தாமல் கூட்டுறவுக் கழகத்தின் வளர்ச்சிக்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தில் நிர்வாக உறுப்பினர்கள் ஐவர் வெளியேற்றப்பட்டு புதிதாக ஐவர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தேர்வுக்கு 8 பேர் போட்டியிடுகின்றனர். அணி இல்லாமல் இப்போட்டி நடைப்பெறும் என அவர் சொன்னார்.

.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles