
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் அக் 21-
பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் 33.17 மில்லியன் வெள்ளி இந்திய தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில்
பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்
வாயிலாக 384 இந்திய தொழில் முனைவோருக்கு 33.17 மில்லியன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் 1,412 பேர் விண்ணப்பம் செய்தனர்.
இதில் இவ்வாண்டு அக்டோபர் 14 ஆம் தேதி வரை 384 இந்திய தொழில் முனைவோர் நன்மை அடைந்து உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதரவுடன், அதிகமான தொழில் முனைவோர் சவால்களை சமாளித்து அதிக வெற்றியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
BRIEF-i திட்டம் தொழில் முனைவோர் துறையில் அதிக வெற்றிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் வெற்றி தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள் என இன்று தலைநகரில் உள்ள பேங்க் ரக்யாட் வங்கியின் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் இந்திய தொழில் முனைவோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை ஏற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த
பிரிப்–ஐ, தெக்குன் போன்ற அறிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.
நிதியுதவி பெற்ற தொழில்முனைவோருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்

