கிள்ளான் லிட்டில் இந்தியா செட்டி பாடாங்கில் சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழ்ப்பள்ளி – கோவில்களுக்கு மிகப்பெரிய மானியம் ! ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

ஷா ஆலம் ஆக 21-
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளிக் கொண்டாட்டம் வரும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த கொண்டாட்டம் இரவு 7.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக நடைபெறும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில மிகவும் சிறப்பான முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரிலுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசின் சார்பாக மானியம் வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 98 தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் உயர்கல்வி பயிலும் 602 இந்திய மாணவர்களுக்கு இந்த விழாவில் மானியம் வழங்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles