
சுங்கை பட்டாணி அக் 22-
கெடா பாடங் லெம்பு தோட்டத்தில் அமைந்துள்ள கலைவாணி தமிழ்ப்பள்ளி, கோலா மூடா யான் மாவட்ட ரீதியிலான கலைவாணி சுழற்கிண்ணக் காற்பந்து போட்டி ஒன்றை முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது.
மாணவர்களின் காற்பந்து விளையாடும் ஆற்றலை வெளிகொணர இப்போட்டியினைக் கலைவாணி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்னின்று நடத்தினர்.
பள்ளியின் தலைமையாசிரியை திருமதி த .ஜெயலட்சுமியின் ஆதரவாலும், புறப்பாட நடவடிக்கைத் துணைத் தலைமையாசிரியர் திரு. கார்த்திக் சோமுநாயுடு அவர்களின் ,ஆலோசனையாலும் முயற்சியாலும், பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்கள் திருமதி சூ. மஞ்சுளா, திரு. இரா. பிரகாஷ் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவாலும், முன்னால் மாணவர்களின் ஒத்துழைப்பாலும் இச்சுழற் கிண்ணப் போட்டி 18.10.2024 (வெள்ளிக்கிழமை) இனிதே நடைப்பெற்றது.
கலைவாணி தமிழ்ப்பள்ளியோடு, ஃமா ஹவா சீனப்பள்ளி( SJKC Mah Wah), சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி(SJKT SUNGAI GETAH), துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (SJKT TUN SAMBANTHAN), ஸ்கார்ப்ரோ பிரிவு 2 தமிழ்ப்பள்ளிகளும் (SJKT SCARBORO BHG.2 )கலைவாணி சுழற்கிண்ணக் காற்பந்து போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.
கோலா மூடா மாவட்ட தொடக்கப் பள்ளி பாலர் பள்ளி துணை கல்வி அதிகாரி திரு கணேசன் பலராமன் அவர்கள் இப்போட்டியினை அதிகாரப்பூர்வமாக சிறப்புரை ஆற்றி திறந்து வைத்தார்.
இதில் கலைவாணி தமிழ்ப்பள்ளி முதல் முறையாக கலைவாணி சுழற்கிண்ணத்தை வாகை சூடி வெற்றிப்பெற்றனர்.
சுழற் கிண்ணக் கோப்பையைக் கெடா மாநில தொடக்கப் பள்ளி/ பாலர் பள்ளி துணை கல்வி அதிகாரி திரு. நாகேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
நிறைவுரையில் அவர் இது போன்ற போட்டிகள் தொடர வேண்டுமென வாழ்த்தினார்.
வெற்றிக்கு வேட்கை, வெற்றியின் கோர்வையாக கலைவாணி தமிழ்ப்பள்ளி கல்வி கேள்விகளிலும் புறப்பாட நடவடிக்கையிலும் முத்திரை பதித்து புகழாரம் சூட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முழுக்க முழுக்க இலவசமாக நடைபெற்ற இப்போட்டிக்கான செலவுகள் யாவும் நன்மனம் கொண்ட தனிநபர்களின் கொடையாலும் ஆதரவாலும் சீரிய முறையில் நடைபெற்றது.

