
நாமக்கல்: அக் 23-
திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் பொம்மை குட்டைமேட்டில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் முதல்வர் பேசியதாவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது…
பொருளாதாரத்தை வளர்க்கும் தோழிகள் நிறைந்த பூமி நாமக்கல். மற்ற ஆட்சியர்களுக்கு எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா விளங்கி கொண்டிருக்கிறார்.
கல்லூரியில் பயிலும் மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் ரூ.1000 உதவித் தொகை பெறுவதில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் மாவட்டத்தில் நாமக்கல் 2ஆவது இடத்தில் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுதான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.