உயர் கல்வி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்குக !டத்தோஸ்ரீ இரமணன் வேண்டுகோள்

கோலாலம்பூர்: அக் 24-
தீபாவளியை முன்னிட்டு உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.

தீபாவளி திருநாள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பெருநாளை முன்னிட்டு அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

ஆகவே அரசு உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான விடுமுறை விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

குறிப்பாக வரும் அக்டோபர் 29ஆம் தேதி காலை வரை உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு வகுப்புகள் உள்ளது.

இந்த வகுப்புகளை முடித்து கொண்டு எப்படி வீட்டிற்கு செல்வது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதற்கு அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles