பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றம்!டத்தோ டி. மோகன்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் அக் 24-
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2025 பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிரதமராக வருவதற்கு இந்தியர்களின் வாக்குகள் முக்கிய காரணமாகும்.

ஆனால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர் பார்த்த அளவுக்கு இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் செய்யவில்லை.

டத்தோஸ்ரீ அன்வார் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற இல்லை

எனக்கு தெரிந்த வரையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளார்.

புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கும் அவர் அனுமதி வழங்கினார்.

ஆனால் இப்போது உள்ள மடானி அரசாங்கம் எத்தனை தமிழ்ப் பள்ளிகளை கட்டி வருகிறது என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியுமா என்று டத்தோ மோகன் சவால் விடுத்தார்.

மெட்ரிக் குலேஷனில் பயில எத்தனை இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்பதையும் அரசாங்கம் பட்டியலை வெளியிட முடியுமா என்றும் அவர் கேட்டார்.

முன்பு மஇகாவை திட்டிவர்வர்கள் இப்போது ஆளுங்கட்சியில் எம்பிக்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles