30 ஆண்டுகளாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு!

தாமான் மூடா, அக்.25-
தெரத்தாய் தொகுதியில் உள்ள தாமான் மூடாவில் சுமார் 30
ஆண்டுகளாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனை கால்வாய் அமைப்பு
மேம்படுத்தப்பட்டதால் விடிவு ஏற்பட்டது .

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தான் வெளியிட்ட
கொள்கையறிக்கையின் ஒரு பகுதியே இந்த திட்டம் என்று சட்டமன்ற உறுப்பினர் யூ
ஜியா ஹவுர் கூறினார்.

வெள்ளப் பிரச்சனை இன்னும் இருந்தாலும், சுமார் RM3 மில்லியன் செலவில்
கால்வாய் அமைப்பை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் மேம்படுத்திய பின் அதன் பாதிப்பு குறைந்துள்ளது,

நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய் துறையால் ஆய்வு செய்யப்பட்டு ரிங்கிட் 18 மில்லியன்
செலவில் கம்போங் தாசிக் பெர்மாயில் கால்வாய் அமைப்பை மேம்படுத்தும் பணி
மேற்கொள்ளப்படுவதாக ஜியா ஹவுர் கூறினார்.

இதுபோன்ற பணிகளால், பல வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்,
என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles