
சுங்கை சிப்புட், அக் 25-
நாளை அக்டோபர் 𝟐6ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 முதல் இரவு 10 வரை, சுங்கை சிப்புட் கம்போங் முஹிபா இரவுச் சந்தை வளாகத்தின் அருகில் அமந்திருக்கும் பொது மைதானத்தில், பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினருமான மான்புமிகு லோ சீ யீ அவர்களின் சேவை மைய குழுவினரின் ஏற்பாட்டில் 2024-ஆம் ஆண்டின் தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்நிகழ்வின் ஒருங்கினப்பாளரும் மற்றும் கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினருமான திரு. கோபி இராமசாமி கூறினார்.
ஒவ்வொரு வருடமும் நிகழ்த்த கூடிய வகையில் இல்லாது, இவ்வருடம் பலவித சுவாரிஷ்யமான மற்றும் குதூகலமான நிகழ்வுகளுடன் இக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு. கோபி இராமசாமி மேலும் கூறினார்.
வரணம் தீட்டும் போட்டி, கோலப்போட்டி, இந்தியர் பாரம்பரிய ஆடை ஆபரணப் போட்டி, உள்ளூர் சிறு வியாபாரிகளின் தீபாவளி வணிகம், ஆடல் மற்றும் பாடல் நிகழ்வுகள், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேடை படைப்புகள், சிறு-சிறு விழையாட்டுகள் மற்றும் பரிசுகள், பாரம்பரிய உணவுகளான மாமாக் மீ கோரேங், லக்சா, கரி மீ, சூப் மீ, நாசி லெமாக் ஆயாம், சென்டோல், சப்பாத்தி, தோசை, பானிபூரி, ஐஸ்கிரீம், கச்சாங் பூத்தே என இன்னும் பல சுவையான தருணங்கள் இந்நிகழ்வில் காத்திருக்கின்றன எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட ஜாலோங் சற்றமன்ற சேவை மைய்ய குழுவினரான திரு. க. ஏலன், கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு. க. வேதமானிக்கம், திரு. இரவிச்சந்திரன், திருமதி. ஏ. எலிஸ் என மேலும் பலரோடு சேர்ந்து நிகழ்வு ஏற்பாடுகளை செவ்வண செய்து வருவதாகக் கூறினார்.
ஆகவே, சுற்று வட்டார மக்கள் இந்த தீபாவளி நிகழ்வில் மறவாது தவறாது கலந்து கொள்ளுமாறு மான்புமிகு லோ சீ யீ அவர்களின் சார்பில் அனைவரையும் கோபி கேட்டுக் கொண்டார்.

