
செமினி, அக் 25-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலுலங்காட் தொகுதியில் 450 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் தலா 200 பேருக்கு வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி தெரிவித்தார்.
இம்முறை மொத்தம் 450 பேர் விண்ணப்பம் செய்தனர்.
இதில் 200 பேருக்கு சிலாங்கூர் அரசின் பற்று சீட்டுக்கள் வழங்கப்பட்ட வேளையில் இதர 250 பேருக்கு வேஷ் அரசு சார்பற்ற இயக்கம் , உலுலங்காட் நாடாளுமன்ற தொகுதி சேவை மையம் மற்றும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மூலமாக கிடைக்கப் பெறாத உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
உலுலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறை விண்ணப்பம் அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே தீபாவளி அன்பளிப்புகள் பெற்று கொண்ட மக்கள் உலுலங்காட் நாடாளுமன்ற தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி மற்றும் அவரது அணிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

