மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி சீரும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது!

மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர் அக் 26-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி இன்று தலைநகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட செ.வே.முத்தமிழ்மன்னன் தலைமையிலான செயலவை உறுப்பினர்கள் ஒரு மாத காலத்துக்குள் நிதியை திரட்டி விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மலேசிய நண்பன் ஆசிரியர் டத்தோ எம்.இராஜன், ராஜேஸ்வரி கணேசன், மக்கள் ஓசை ஆசிரியர் மு. மலையாண்டி, செல்லியல் ஆசிரியர் முத்தரசு, ஆர்டிஎம் தமிழ் செய்தி ஆசிரியர் திருமதி தவமலர், தேசம் ஊடக ஆசிரியர் குணாளன் மணியம், தென்றல் ஆசிரியர் வித்யா சேகர், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், ஆசிரியர் இராமதாஸ் மனோகரன், வணக்கம் மலேசிய ஆசிரியர் பத்மநாபன், அஸ்ட்ரோ தமிழ் செய்தி பிரிவின் ஆசிரியர்கள், ம இகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் உட்பட சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

நாடாறிந்த ஆர்டிஎம் பணியாளர் தெய்வீகன் நிகழ்ச்சியை திறம்பட வழி நடத்தினார்.

ஆடல் பாடல் இன்னிசை விழாவுடன் நடைபெற்ற இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

மேலும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles