300 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியது விலாயா மைபிபிபி! நவம்பர் 9இல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர், அக் 26-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லிலாயா மாநில மைபிபி சார்பில் பி40 பிரிவை சேர்ந்த 300 பேருக்கு அன்பளிப்புகளை வழங்கியது.

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மை பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ லோகபாலா, விலாயா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 300 பி40 பிரிவு மக்களுக்கு அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.

டத்தோஸ்ரீ ஜொஹாரியின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி தலைநகரில் உள்ள மைபிபிபி கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது என கூட்டரசு பிரதேச மை பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

நாங்கள் செய்த இந்த உதவி அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அன்பளிப்புகள் வழங்குவது மட்டுமல்லாமல் பி40 பிரிவு மக்களுக்கு கட்சியின் சார்பில் மேலும் பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களின் பிரச்சினைகளை கண்டறிய நோரடியாக அவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை மை பிபிபி கட்சி முன்னெடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே மை பிபிபி கட்சியின் பொது தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை மணி 11.00 முதல் 3.00 மணி வரையில் மை பிபிபி கட்சியின் தலைமையகத்தின் முன்புறம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து பொது மக்களும் கலந்துக்கொண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழலாம் என டத்தோ லோகபாலா கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles