
கோலாலம்பூர் அக் 29-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய புகார் மையம் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தீபாவளி இன்னிசை விழா விமரிசையாக நடைபெற்றது.
தேசிய புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
சுற்றுலா துறை அமைச்சின் துணை தலைமை செயலாளர் இதில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
வசதி குறைந்த 150 பேருக்கு தீபாவளி உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


