மக்களின் சேவைக்கு முன்னுரிமை வழங்குவோம்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேண்டுகோள்

சுங்கை சிப்புட், அக். 29-
ம.இ.கா.வை வலுப்படுத்துவது கிளைத் தலைவர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று கட்சி தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் உள்ள இந்தியர்களின் தேவைகளுக்கு காலம் காலமாக ம.இ.கா. சேவையாற்றி வந்துள்ளது.்

அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும் கட்சி இந்தியர்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

கட்சியின் பலம் கிளைத் தலைவர்களின் சேவை முக்கியம் . சேவையில் பின் தங்கினால் சமுதாயத்தின் நம்பிக்கையை இழந்து. விடுவோம் .

அந்த நம்பிக்கையை வலுப்படுத்த சேவையை மேற்கொள்ளவேண்டும் என்று சுங்கை சிப்புட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு பேசினார்.

கட்சியில் சேவையாற்றிவரும் கிளைத் தலைவர்களின் சேவையை கட்சி தலைமைத்துவம் உணர்ந்துள்ளது. ஆகவே அவர்களின் நலன்காக் பாடுபடும் என்றார்.

பேரா மாநில ம.இ.கா. தலைவராக நியமனம் செய்யபட்டுள்ள டான்ஸ்ரீ எம். ராமசாமி உணர்ச்சிப் பூர்வமாக பேசுவார் . ஆனால் கட்சி சேவையாற்றக கூடிய குணம் கொண்டவர் என்று பேசினார்..

இந்த விருந்து உபசரிப்பு பேரா மாநில ம.இ.கா. தவைவர் டான்ஸ்ரீ எம் ராமசாமி முன்னிலையில் சிறப்புடன் நடைபெற்றது.

இதில் பேசிய அவர்( டான்ஸ்ரீ ராமசாமி ) கட்சி கிளைத் தலைவர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லை என்றால் கட்சி இல்லை , ஆக அவர்களின் சேவை மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றார்..

அதே வேளையில் கிளைத் தலைவர்களாக பொறுப்பு வகிப்பவர்கள் கடமைக்காக மட்டும் இருக்கக் கூடாது மாறாக சேவையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles