பாப்புவா நியூ கினியாவின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகணத்தின் ஆளுநர் சசிதரன் முத்துவேள் சிறப்பிக்கப்பட்டார்!

ஈப்போ, அக்.29-
பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்கமும், ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த
“விருது பாராட்டு விழா” நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக
பாப்புவா நியூ கினியா வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநரான பத்ம ஸ்ரீ. மேதகு சசிதரன் முத்துவேள் வருகை தந்திருந்தார். அவரோடு பாப்புவா நியூ கினியா நாட்டின் தூதரக அதிகாரியும், அந்நாட்டின் அமைச்சரும் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

நம் நாட்டின் மூத்த வழக்கறிஞரான
.ம. மதியழகனார் இந்நிகழ்வுக்கு தலைமை வகிக்க, வரவேற்புரையை ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தின் மேனாள் தலைவரும் நடப்பு செயலாளருமான கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் ஆற்ற, சிறப்புரையை ஈப்போ தமிழர் திருநாள் இயக்கத்தின் தலைவரான மாயமுத்து சிறப்பாக ஆற்றினார்.அதோடு
மூத்த வழக்கறிஞர் ம.மதியழகமானார் அவருக்கே உரிய நகைச்சுவையோடு மதிப்புரையாற்றி வந்திருந்திருந்த பேராளர்கள் மகிழ்ச்சிப் படுத்தினார்.

நேரம் போனதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சியின் முக்கிய விருத்தினரான பத்மஸ்ரீ மேதகு சசிதரன் முத்துவேல் அவர்களின் உரை அபாரமாய் அமைந்து வந்திருந்த பேராளர்களை அசத்தியது என்றால் அது மிகையல்ல….
அவர் பேசிய தமிழ் மொழி வந்திருந்த பேராளர்களை பெரிதும் ஈர்த்தது என்றால் நிகழ்ச்சிக்கு அவர் தூய வெள்ளை வேட்டிச் சட்டையில் நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் வந்திருந்தது எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்தியது என்றேக் கூறவேண்டும்.

அவரது உரையில் பாப்புவா நியூகினியாவின் வரலாற்றையும் அதன் தொன்மையான மொழி, அந்நாட்டின் வளம் மற்றும் பொருளாதாரம் என பல அரிய தகவல்களை அவர் விவரிக்க வந்திருந்த பார்வையாளர்கள் பரவத்துடன் அவரது உரையை ஆர்வத்துடன் செவிமடுத்தனர்.

இறுதியாக இந்நிகழ்வின் நோக்கமான விருதளிப்பு விழாவில் மேதகு பத்மஸ்ரீ சசிதரன் முத்துவேல் அவர்களுக்கு உலகப் பெருந் தமிழன் எனும் விருது அளித்து அவரை கவுரவப் படுத்தியது பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கமும் , ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles