
ஷா ஆலம், அக். 29– இங்கு நடைபெற்ற சிறப்பு சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை, வாய்ப்பு குறைந்தவர்களுக்கு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 4,600 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
முதியவர்கள், பூர்வக் குடியினர், வறியவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோர் மற்றவர்களுடன் போட்டியிடாமல் வேலை தேடுவதை இந்த பிரத்தியேக வேலை வாய்ப்புச் சந்தை எளிதாக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி கூறினார்.
முதன் முறையாக நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளதாகக் கூறிய டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முன்னாள் குற்றவாளிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குரிய வாய்ப்பினை இது ஏற்படுத்துகிறது என்றார்.

