வாஷிங்டன்: நவ 6- அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை அவர் 270 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 226 இடங்களை வசப்படுத்தி மிகவும் பின் தங்கி உள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் அமோக வெற்றி பெறுவார் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளும் இப்போதே தவிடு பொடியாகிவிட்டது.
தற்போது உள்ள நிலையில் டெக்சாஸ், ஓஹியோ, நெப்ராஸ்கா, நார்த் டகோடா, சவுத் டகோடா, லூசியானா, வயோமிங், இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, ஃப்ளோரிடா உள்ளிட்ட 24 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்விங் மாகாணங்களில் வடக்கு கரோலினாவைத் தொடர்ந்து ஜார்ஜியா மாகாணத்தையும் ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.
வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், ரோட்ஸ் ஐலாண்ட், கனெடிகட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.கூடவே அதிக எலக்டோரல் காலேஜ் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தையும் கமலா ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார்.எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
அவருக்கு இதுவரை 270 இடங்கள் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 226 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.இதன் வழி அமெரிக்காவின் இரண்டாவது முறையாக அதிபராக டோனால்ட டிராம்ப் பதவி ஏற்க உள்ளார்.
அவருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.