
புத்ரா ஜெயா, நவ 8-
மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி திருவிழா இன்று மிகப்பெரிய அளவில் Putrajaya ioi city Mall கொன்ஷேசன் செண்டரிலில் கோலாகலமாக தொடங்கியது.
மூன்று நாள் திருவிழாவானது பல்வேறு வணிகத் துறைகளைச் சேர்ந்த 100 முகப்பிடங்கள் மூலம் உள்ளூர் பெண்களின் தொழில் முனைவோர் உணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் (KUSKOP) & MyMall உடன் இணைந்து வனிதா & நோனா வார இதழால் Ideaktiv இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர்கள் மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தேசிய பொருளாதாரத்தை இயக்கும் பெண் தொழில் முனைவோர் என்ற சுலோகத்துடன் இந்த கார்னிவல் உள்ளூர் பெண் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், அவர்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், நெட்வொர்க்கை உருவாக்கவும் அமைந்துள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
மலேசிய பெண் தொழில் முனைவோராக அடையாள உணர்வை வளர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது என்று இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

