
பெட்டாலிங் ஜெயா, நவ. 8- சிலாங்கூரிலுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் கொள்ளையடித்து அவர்களின் வாகனங்கள் பறித்துச் செல்லும் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கருதப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்தைந்து முதல் 39 வயதுக்குட்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்வோர், பொருள் பட்டுவாடா பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பர்கள் உள்ளிட்ட அக்கும்பல் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி கூறினார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் இக்கும்பல் இரவு முதல் அதிகாலை வரை தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
பெர்னாமா

