
ஷா ஆலம், நவ. 8- கடந்த வாரம் பினாங்கில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, விரைவுப் பேருந்துகளில் மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Apad) வழங்கிய அறிவுறுத்தல்கள், சம்பவம் குறித்த முழு அறிக்கை கிடைக்கும் வரை, சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பது நோக்கமாகக் கொண்டது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
“சிறப்புக் குழுவினால் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும். அவர்களுக்கு உண்மையான காரணத்தை அறிய 14 நாட்கள் அவகாசம் அளித்தேன்.இது விரிவாக அறிவிக்கப்படும்.
“இதற்கிடையில், மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அமைச்சகம் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மேம்படுத்தி செயல்படுத்தும்,” என்று அவர் மக்களவை அமர்வில் கூறினார்.

