
சென்னை: நவ 18- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற காவலை அடுத்து, புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்படுகிறார்.

