மீபா ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை காண திரண்டு வாருங்கள்? பொதுமக்களை அழைக்கிறார் ஸ்ரீசங்கர்

கோலாலம்பூர் நவ 18-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 7,8 ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது .

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீபா ஏற்பாட்டில் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டும் நடைபெறும் கால்பந்து போட்டியில்
ஆண்கள் பிரிவில் 40 மாநில தமிழ்ப் பள்ளி குழுக்களும் பெண் பிரிவில் 40 குழுக்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறது.

மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு டத்தோ என்.எஸ். மணியம் கிண்ணம் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் Mifa Beyond kid’s கால்பந்து போட்டி டிசம்பர் 7 ஆம் தேதி மற்றோர் திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று மீபா கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவரும் பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து கிளப் தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

ஜாவி தோட்ட தமிழ்ப் பள்ளி, தாசேக் பெர்மாய் தமிழ்ப் பள்ளி, ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, பழனியாண்டி தோட்ட தமிழ்ப் பள்ளி, கிரியான் தோட்ட தமிழ்ப் பள்ளி, வால்டோர் தோட்ட தமிழ்ப்பள்ளி, பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப் பள்ளி, பாயன் லெப்பாஸ் தமிழ்ப் பள்ளி, ராமதாசர் தமிழ்ப் பள்ளி,பாரதி சுப்பிரமணியம் தமிழ்ப்பள்ளி, புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப் பள்ளி, அசாத் தமிழ்ப் பள்ளி மாக் மண்டின் தமிழ்ப் பள்ளி, பிறை தமிழ்ப் பள்ளி, நிபோங் திபால் தமிழ்ப் பள்ளி மற்றும் திரான்ஸ்கிரியான் தமிழ்ப் பள்ளியை பிரதிநிதித்து பாலர் பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள் என்றார் அவர்.

சுமார் 6,000 பேர் இந்த போட்டிய காண படையெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுமக்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை காண திரண்டு வரும்படி ஸ்ரீ சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles