இலங்கை பிரதமனார் கலாநிதி ஹரிணி அமரசூரிய.. அதிபர் திசநாயக முன்னிலையில் பதவியேற்றார்..!!

இலங்கை: நவ 18-
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலிலும் அனுரகுமார திச நாயக்க கட்சி அமோக வெற்றி பெரும்பான்மை பிடித்தது.இதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதவிப்பிரமாணம் அதிபர் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.இலங்கையின் புதிய பிரதமராக இன்று கலாநிதி ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்றார். அவர் அதிபர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles