கானாவின் அதிரடியில் தென் கொரியா அதிர்ச்சி தோல்வி

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34ஆவது நிமிடத்தில் முகமது குதுஸ் இரண்டாவது கோலும் அடித்தனர்.

இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61ஆவது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68ஆ து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles