

நாட்டில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலாங்கூர் கோலாலம்பூர் ஜேகேஆர் கூட்டுறவு சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஜேகேஆரில் பணிபுரிந்த மற்றும் பணி புரிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த கூட்டுறவு கழகம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த கூட்டுறவு கழகம் 250 உறுப்பினர்களுடன் வெற்றி நடை போடுகிறது.
கூட்டுறவு கழகத்தின் தலைவர் கமாருல் ஜமான், செயலாளர் சைமன் சூசை தலைமையில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் உறுப்பினர்கள் நலன்கள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்து ஆதரவு வழங்கினர்.

