
நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கி இருப்பவர்கள் அமைச்சர்களாக நியமிக்க வேண்டாம் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
செத்திய வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி மற்றும் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் ஆகியோர் இதை ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளனர்.
பிரபல மூத்த அரசியல்வாதி ரபிடா அஜிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையில் நீதிமன்ற வழக்குகளை எதிர் நோக்கி இருப்பவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
புதிய அமைச்சரவைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாமல் இருக்க இது அவசியம் ஆகிறது என்று அவர் சொன்னார்.
புதிய அமைச்சரவை பட்டியலை மிகவும் கவனமுடன் பரிசளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

