மனித மூலதன பற்றாக்குறை சரி செய்ய கல்வி துறையில் மாற்றங்கள் தேவை! டாக்டர் பி இராமசாமி வலியுறுத்து

வேலை சந்தையில் காணப்படும் மனித மூலதன பற்றாக்குறையை சரி செய்ய நாட்டில் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு மாற்றங்களையும் சீர்த்திருத்தங்களையும் செய்ய கோரி பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாட்டில் தொழில்நுட்பம் அறிவியல் திறன் கொண்ட மனித மூலதன பற்றாக்குறையை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட்ஜெட்டில் கல்வி அமைச்சுக்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தொழில்நுட்ப அறிவியல் ஆற்றல் மிக்க மனித மூலதனத்தை உருவாக்குவதில் கல்வி துறை பின் தங்கி இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles