வருமானம் குறைந்த
30, 000 குடும்பங்களுக்கு
சிலாங்கூர் அரசின் மாதந்தோறும்
300 வெள்ளி பிங்காஸ் உதவித் தொகை

வரும்
2023ஆம் ஆண்டில் பிங்காஸ் எனப்படும் 300 வெள்ளி உதவித் தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 30,000 மாக உயர்ந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் இன்று அறிவித்தார்.

இந்த ஆண்டு 25,000 பேருக்கு இந்த பிங்காஸ் உதவித் தொகை வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு 30,000 பேருக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.

2,000 வெள்ளி வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த பிங்காஸ் உதவித் தொகை வழங்கப்படும்.

மாதந்தோறும் 300 வெள்ளி வீதம் ஆண்டுக்கு 3,600 வெள்ளியை அவர்கள் பெறுவார்கள்.

மாதந்தோறும் வழங்கப்படும் 300 வெள்ளியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்கள் இல்லத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles