அரசு உயர்கல்விக் கூடங்களில் பாகுபாடு இல்லை – தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்ப்பு!

ஈப்போ, நவ. 25 – அரசாங்க பல்கலைக் கழங்களில் குறிப்பாக அதிக தேவை
உள்ள துறைகளில் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்ப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உயர்கல்வி அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.

அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் மாணவர்களுக்கு இடம்
கிடைக்காததை இன விவகாரமாகவோ அல்லது குறிப்பிட்ட தரப்பினருக்கு
எதிராக பாகுபாடு காட்டுப்படுவதாகவோ சித்தரிக்க வேண்டாம் என அவர்
கேட்டுக் கொண்டார்.

அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் மாணவர் சேர்ப்பு நடவடிக்கையில்
நாம் பாகுபாடு காட்டுவதில்லை.

மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும்
ஏ தகுதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்
என அவர் தெரிவித்தார்.

அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயங்களில் அவர்களுக்கு முதன்மை தேர்வு
வேண்டும் என்பதுதான்.

வழக்கமாக, மருத்துவம், மருந்தியல் மற்றும் பல்
மருத்துவம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையே அது
உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர்.

நேற்று இங்கு பேராக் மாநில தேசிய முன்னணியின் பேராளர் மாநாட்டை
முடித்து வைத்தப் பின்னர் தேசிய முன்னணியின் பொதுச்
செயலாளருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles