டிசம்பர் 21 ஆம் தேதி ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், நவ.26-
மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

மூன்றாவது முறையாக தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு தமிழ்க்கல்வியின் தேவையும் தீர்வும் என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அறவாரியம் கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது என்று
ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முனைவர் டாக்டர் செல்வஜோதி தெரிவித்தார்.

இந்த மாநாடு வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழகங்கள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். ஆசிரியர் பயிற்ச்சி மாணவர்களுக்கும் பலகலைக்கழக மாணவர்களுக்கும் 50 விழுக்காடு கட்டண கலிவு உண்டு.

மலேசியாவில் தமிழ்க்கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் கண்டறிதல், தமிழ்க்கல்வியின் தர மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறைகளை ஆராய்தல், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை, இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் பாடத்தை ஊக்குவித்தல் போன்ற் முக்கிய நோக்கங்களை அடைப்படையாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டாக்டர் செல்வஜோதி தெரிவித்தார்.

இம்மாநாட்டின் முதன்மை ஏற்பாட்டாளர்களான மலேசிய தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன், மலேசிய தமிழ்மொழிக் காப்பகத்தின் தலைவர் சுப்பிரமணியன், மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் தலைவர் அர்ஜுணன் ஆகியோர் இன்று கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles