நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் – தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள தன்னைப் பற்றிய ஆவணப் படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

தனுஷ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, திரையுலகில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் நேரடியாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், நயன்தாரா தரப்புக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் தனுஷ் தரப்பின் வாதங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவருடைய வழக்கறிஞர் அருண்.

அவர், “நானும் ரௌடிதான் படத்திற்கான பதிப்புரிமை உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் தனுஷே உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு ஆதரவாகப் பல்வேறு நடிகைகள் அவருடைய அறிக்கையை இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சமூக ஊடகங்களில் மற்றொரு தரப்பினர், இந்த ஆவணப்படத்திற்கான ஒரு விளம்பர உத்தியாக நயன்தாரா இதைச் செய்வதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles