பார்க்கிங் அபராதக் கட்டணம் RM15 ஆகக் குறைப்பு!

ஷா ஆலம், நவ 29: பார்க்கிங் அபராதக் கட்டணத்தை RM15 ஆகக் குறைக்கும் பிரச்சாரத்தை கிள்ளான் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

டிசம்பர் 1 முதல் 31 வரை அபராத தொகையைச் செலுத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு கிள்ளான் துணை மேயர் முகமட் ஜாரி அஃபெண்டி முகமட் ஆரிப் அழைப்பு விடுத்தார்.

“இந்தச் சலுகையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை உள்ளடக்கிய அபராதங்களுக்கு RM15 முதல் RM300 வரையிலான குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் முன், நிலுவைத் தொகையை செலுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது பேசிய முகமட் ஜாரி, இந்த சலுகை பல குற்றங்களுக்கு உட்பட்டது அல்ல என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles