கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்தை கைது செய்ய புகார்!

பெரம்பூர்: நவ 29-
பிரபல கானா பாடகி இசைவாணி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் இயக்குனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரியும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டுகின்ற வகையில் நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி மதக் கலவரத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்றுவிக்கும் விதமாக ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுப்படுத்துகின்ற வகையில் பாடல் பாடியுள்ளார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles