
இந்தியாவின் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன.

