ஆம்புலன்ஸ் வண்டி செல்ல பாதையை வழிவிட்ட இந்திய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றார்.

சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து ஆமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காந்தி நகர்- அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வருவதை கண்டார்.

உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார்.

சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது.

இந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles