
பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர் என்று குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில் படிவம் 6 மாணவர்களுக்கு படித்துக் கொடுத்த ஆசிரியை சந்திரமதி இறுதி நாளில் விடை பெற்ற போது அவரின் மாணவர்கள் கண்ணீரோடு வழி அனுப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இறுதி நாளில் அவர் வகுப்பறை விட்டு விடை பெற்றபோது அவரின் மாணவர்கள் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார்.
ஆசிரியை சந்திரமதி இதற்கு முன்னர் ஜொகூரில் மலேசியா மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விரிவுரையாளராக இருந்த போதும் தனது கனிவான உள்ளத்தால் பலரை கவர்ந்தார்.
ஒரு நல்ல விரிவுரையாளர் மற்றும் ஒரு மதிப்புமிகு ஆசிரியை இவர் என்று அவரின் மாணவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

